Asia Cup : பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்றாலும், அந்த கோப்பை இன்னும் இந்திய பிளேயர்களின் கைக்கு கிடைக்கவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவர் மோசின் நக்வி கையில் இருந்து ஆசிய கோப்பையை பெற இந்திய பிளேயர்கள் மறுத்ததால், அவர் வேறு யாரிடமும் கோப்பையை கொடுக்க மறுத்து அந்த கோப்பையை தன்னுடனே எடுத்துச் சென்றார். இதனால், ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றிருந்தாலும், கோப்பை இல்லாமல் வெறும் கைகளுடனே வெற்றிக் கொண்டாட்டத்தை கொண்டாடினர்.
Add Zee News as a Preferred Source
இது குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசும்போது, தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற அணி கோப்பை இல்லாமல் வெற்றிக் கொண்டாட்டத்தை கொண்டியது இதுவே முதன்முறை என தெரிவித்தார். இது எனக்கு புதிய அனுபவமாக இருக்கிறது என்று கூறிய அவர், கோப்பை இல்லாமல் இருந்தாலும், எங்கள் அணியில் இருக்கும் ஒவ்வொரு பிளேயரும் கோப்பைக்கு நிகரானவர்களே, அதனால் அவர்களுடன் கொண்டாடிக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
இந்தியா ஏன் கோப்பையை வாங்கவில்லை?
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை டி20 இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, அந்த கோப்பையை வழங்க இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் மோசின் நக்வியிடம் இருந்து வாங்க மாட்டோம் என தெரிவித்துவிட்டது. அதனால், துபாய் மைதானத்தில் பரபரப்பாக இருந்தது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் மோசின் நக்வி, தான் கோப்பையை வழங்கவில்லை என்றால் வேறு யாரிடமும் கொடுக்க மாட்டேன் என தெரிவித்துவிட்டார். இதனால், கோப்பை இந்தியாவின் கைகளுக்கு கிடைக்கவில்லை.
ஐசிசியிடம் புகார்
இதுகுறித்து பேசியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர், இந்தியா கிரிக்கெட்டின் புனித்தத்தை கெடுத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிசிசிஐ, இது குறித்து ஏற்கனவே தெளிவாக ஆசிய கோப்பை குழுவிடம் தெரிவித்துவிட்டதாகவும், வேண்டுமென்றே மோசின் நக்வி நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து ஐசிசியிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எப்போது இந்திய பிளேயர்களுக்கு கோப்பை கிடைக்கும்?
இப்போதைய சூழலில் இந்திய பிளேயர்களுக்கு ஆசிய கோப்பை கிடைக்காது. இதுகுறித்த சர்ச்சைகள் ஓய்ந்த பிறகே கோப்பை இந்திய அணிக்கு கிடைக்கும். அதுவரை இந்திய அணி கோப்பையை பெற காத்திருக்க வேண்டும். எப்படியிருந்தாலும், சாம்பியன் பட்டம் வென்ற அணி அந்த ஆசிய கோப்பையுடன் குழு புகைப்படம் எடுக்கவில்லை. இனி எடுக்கவும் வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் இந்திய அணி துபாயில் இருந்து இந்தியா வந்துவிட்டது. அடுத்தடுத்த தொடர்களில் விளையாட இருப்பதால் ஆசிய கோப்பை கனவு நிறைவேறியது என்ற திருப்தியுடன் நாட்டுக்கு வந்துவிட்டனர்.
About the Author
S.Karthikeyan