சிவகங்கை: கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன. இனிமேல் இதுபோன்றதொரு அசம்பாவிதம் நடைபெறாத வகையில், தலைமைச்செயலாளரிடம் ஆலோசனை தெரிவித்துள்ளேன் என கரூர் சம்பவம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அங்குள்ள தனியார் மருத்துவமனையிலும் பலரும் சிகிச்சை பெற்று […]
