நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோருகிறது தவெக: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை

சென்னை: ‘கரூர் சம்​பவம், விபத்​து​போல தெரிய​வில்​லை. திட்​ட​மிட்ட சதி​போலவே தெரி​கிறது. எனவே, சிபிஐ அல்​லது சிறப்பு புல​னாய்வு குழு​வைக் கொண்டு உரிய முறை​யில் விசா​ரணை நடத்த வேண்​டும்’ என்று உயர் நீதி​மன்ற விடு​முறைக் கால நீதிப​தி​யிடம் தவெக​வினர் முறை​யிட்டனர்.

உயர் நீதி​மன்​றத்​துக்கு தற்​போது தசரா விடு​முறை என்​ப​தால், விடு​முறைக்கால நீதிப​தி​யான தண்​ட​பாணியை சென்னை ராஜா அண்​ணா​மலைபுரம் பசுமைவழிச் சாலை​யில் உள்ள அவரது இல்​லத்​தில் தவெக வழக்​கறிஞர் அணி​யினர் நேற்று சந்​தித்​தனர். அப்​போது, நீதிப​தி​யிடம் தவெக வழக்​கறிஞர் அறிவழகன், இணை பொதுச் செய​லா​ளர் சிடிஆர். நிர்​மல்​கு​மார் ஆகியோர் முறை​யிட்​ட​தாவது: கரூரில் நடை​பெற்ற விஜய் பிரச்​சார கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயி​ரிழந்த சம்​பவம், விபத்​து​போல தெரிய​வில்​லை.

திட்​ட​மிட்ட சதி​போலவே தெரி​கிறது. பிரச்​சா​ரம் நடந்​து​கொண்டு இருந்​த​போது, திடீரென எங்​கிருந்தோ கற்​கள் வீசப்​பட்​டன. போலீ​ஸார் தடியடி நடத்​தி​யுள்​ளனர். எனவே, இதுதொடர்​பாக சிபிஐ அல்​லது சிறப்பு புல​னாய்வு குழு​வைக் கொண்டு உரிய முறை​யில் விசா​ரணை நடத்த வேண்​டும். கண்​காணிப்பு கேமரா காட்​சிகளை பாது​காக்க உத்​தர​விட வேண்​டும். நடந்த சம்​பவம் தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணை நடத்த வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் முறை​யிட்​டனர்.

இதை கேட்ட நீதிபதி தண்​ட​பாணி, ‘‘சம்​பவம் நடந்த இடமான கரூர், மதுரை உயர் நீதி​மன்ற எல்​லைக்​குள் இருப்​ப​தால் இதுதொடர்​பாக உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில்​தான் மனு தாக்​கல் செய்ய வேண்​டும். அவ்​வாறு மனு தாக்​கல் செய்​தால், 29-ம் தேதி (இன்​று) பிற்​பகல் 2.15 மணிக்கு வழக்கு விசா​ரணைக்கு எடுத்​துக் கொள்​ளப்​படும்’’ என்று தெரி​வித்​தார். தவெக சார்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் இன்று காலை மனு தாக்​கல் செய்​யப்​படும் என தெரி​கிறது. அதை தொடர்ந்​து, தசரா விடு​முறைக் கால சிறப்பு அமர்​வில் மனு இன்று மதி​யம் விசா​ரணைக்கு எடுத்​துக் கொள்​ளப்​படு​கிறது.

இதற்​கிடையே, கரூரை சேர்ந்த செந்​தில்​கண்​ணன் என்​பவர் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் சங்​கரன் நேற்று நீதிபதி செந்​தில்​கு​மார் முன்பு ஆஜராகி, ‘‘கரூர் சம்​பவம் குறித்த முழு​மை​யாக விசா​ரணை நடந்​து, இந்த சம்​பவத்​துக்கு யார் பொறுப்பு என்​பது உறு​தி​யாக தெரி​யும் வரை தவெக சார்​பில் பொதுக்​கூட்​டம், ஊர்​வலம் நடத்த தடை விதிக்க வேண்​டும்’’ என முறை​யிட்​டார். இந்த வழக்கை மாலை 4.30 மணிக்கு விசா​ரிப்​ப​தாக நீதிபதி அறி​வித்​தார். ஆனால், மனு தாக்​கல் செய்யதாமதம் ஆனதால், நேற்று மாலை விசா​ரணை நடை​பெற​வில்​லை. அதே​போல, சென்னை மாநக​ராட்சி பாஜக கவுன்​சிலர் உமா ஆனந்​தன் சார்​பில் வழக்​கறிஞர் வெங்​கட்​ராமன், ‘‘கரூர் சம்​பவம் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும்’’ என்று நீதிபதி செந்​தில்​கு​மாரிடம் முறை​யீடு செய்​தார். இது பொதுநல வழக்​காக இருப்​ப​தால், தான்​ வி​சா​ரிக்​க இயலாது என்​று கூறி, வழக்​கை வி​சா​ரிக்​க நீதிப​தி மறுத்​துவிட்​டார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.