லடாக் மக்கள், கலாச்சாரம் மீது தாக்குதல்: பாஜக, ஆர்எஸ்எஸ் மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் புகார்

புதுடெல்லி: “ல​டாக்​கில் ஏற்​பட்ட வன்​முறை, 4 பேர் உயி​ரிழப்​புக்கு மத்​தி​யில் ஆளும் பாஜக.​வும், ஆர்​எஸ்​எஸ் அமைப்​பும்​தான் காரணம்’’ என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி குற்​றம் சாட்​டி​யுள்​ளார். காஷ்மீரில் இருந்து பிரித்து தனி யூனியன் பிரதேச​மாக லடாக் அறிவிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் மாநில அந்​தஸ்து வழங்க கோரி சமூக ஆர்​வலர் சோனம் வாங்​சுக் உண்​ணா​விரதப் போராட்​டம் நடத்​தி​னார்.

கடந்த வாரம் அங்கு இளைஞர்​கள் திடீரென போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அது கலவர​மாக மாறிய​தில் 4 பேர் உயி​ரிழந்​தனர். இதையடுத்து வாங்​சுக் உண்​ணா​விரதத்தை வாபஸ் பெற்​று, வன்​முறைக்கு கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். அதன்​பின், வாங்​சுக் நடத்​தி வரும் என்​ஜிஓ அமைப்​புக்கு சட்​ட​விரோத​மாக வெளி​நாட்​டில் இருந்து பணம் வந்​தது, அவர் பாகிஸ்​தான் சென்று வந்​தது குறித்து சிபிஐ விசா​ரணை தொடங்​கியது. மேலும், கடந்த வெள்​ளிக்​கிழமை வாங்​சுக்​கை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இந்​நிலை​யில், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறிய​தாவது: லடாக்​கில் ஏற்​பட்ட வன்​முறைக்கு மத்​தி​யில் ஆளும் பாஜக.வுக்​கும் அதன் கொள்கை வழி​காட்​டி​யாக உள்ள ஆர்​எஸ்​எஸ் அமைப்​பும்​தான் காரணம். லடாக் மக்​கள் தங்​கள் உரிமை​களுக்கு குரல் கொடுத்​தனர். ஆனால், 4 பேர் உயிரை பறித்து பதில் அளித்​துள்​ளது பாஜக. அத்​துடன் வாங்​சுக்கை சிறை​யில் அடைத்​துள்​ளது.

லடாக் மக்​கள் மிகச் சிறந்​தவர்​கள். அவர்​களு​டைய கலாச்​சா​ரம், பண்​பாட்​டின் மீது பாஜக.​வும் ஆர்​எஸ்​எஸ் அமைப்​பும் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. லடாக் மக்​களுக்கு உரிமை​களை கொடுக்க வேண்​டும். அங்கு வன்​முறையை நிறுத்த வேண்​டும். அவர்​களுக்கு மாநில அந்​தஸ்து உரிமையை வழங்க வேண்​டும்​. இவ்​வாறு ராகுல்​ காந்​தி கூறி​யுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.