வரலாறு படைத்த மிக்​-21 போர் விமானங்களுக்கு ஓய்வு: பிரியாவிடை நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பெருமிதம்

சண்​டிகர்: இந்தியா – ரஷ்யா இடையே நில​வும் நீண்ட கால உறவுக்கு ஓய்வு பெறும் மிக்​-21 போர் விமானங்​களே சாட்​சி​யாக உள்ளன என பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பெரு​மிதத்​துடன் கூறி​னார். ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை அமெரிக்கா விமர்​சித்​து, இந்​தியா மீது 50 சதவீத வரி​வி​தித்​தது. இந்​நிலை​யில் விமானப்​படை​யில் கடந்த 1960-ம் ஆண்டு இணைந்து 60 ஆண்​டு​களுக்கு மேல் பணி​யாற்​றிய மிக்​-21 போர் விமானங்​களுக்கு பிரி​யா​விடை அளிக்​கும் நிகழ்ச்சி சண்​டிகரில் நேற்று நடை​பெற்​றது.

இதில் சிறப்பு விருந்​தின​ராக பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் கலந்து கொண்​டார். முப்​படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவு​கான், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்​திர திவே​தி, கடற்​படைத் தளபதி தினேஷ் கே.​திரி​பா​தி, விமானப்​படை தளபதி ஏ.பி.சிங் உட்பட பலர் கலந்து கொண்​டனர்.

இந்​நிகழ்ச்​சி​யில் இந்​தி​யா​வின் போர்​களில் மிக்​-21 போர் விமானங்​கள் முக்​கிய பங்​காற்​றியது குறித்து எடுத்​துரைக்​கப்​பட்​டன. 1965 மற்​றும் 1971-ம் ஆண்டு நடை​பெற்ற பாகிஸ்​தான் போர், 1999-ம் ஆண்டு கார்​கில் போர், 2019-ல் நடத்​தப்​பட்ட பால​கோட் தாக்​குதல் ஆகிய​வற்​றில் மிக்​-21 போர் விமானங்​கள் முக்​கிய பங்​காற்​றின.

பல ஆண்​டு​காலம் சேவை புரிந்து பழமை​யான​தால் இந்த விமானங்​களில் அடிக்​கடி தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்டு விபத்தை சந்​தித்​தன. இதனால் மிக்​-21 போர் விமானத்​துக்கு ‘பறக்​கும் சவப்​பட்​டி’ என்ற பெயர் கிடைத்​தது. இந்த போர் விமானங்​களை நவீன காலத் தேவைக்​கேற்ப மேம்​படுத்​து​வ​தி​லும் சிக்​கல்​கள் ஏற்​பட்​டன.

ஜாக்​கு​வார், மிராஜ், சுகோய், தேஜஸ், ரஃபேல் என அடுத்த தலைமறை போர் விமானங்​கள் விமானப்​படை​யில் இணைக்கப்பட்டதால், பழமை​யான மிக்​-21 போர் விமானங்​களுக்கு ஓய்வு அளிக்க விமானப்​படை முடிவு செய்​தது. இந்​தி​யப் போர்களில் முக்​கிய பங்​காற்​றிய மிக்​-21 போர் விமானங்​களுக்கு கவுர​வ​மான முறை​யில் பிரி​யா​விடை அளிக்​க​வும் மத்​திய அரசு முடிவு செய்​தது. இதற்​கான பிரி​யா​விடை நிகழ்ச்சி சண்​டிகரில் நேற்று நடை​பெற்​றது. இதில் மிக்​-21 போர் விமானங்​களின் அணி வகுப்பும் நடை​பெற்​றது.

இந்​நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பேசி​ய​தாவது: இந்​தி​யா​வின் வரலாற்று சிறப்பு மிக்க போர்​களில் எல்​லாம், மிக்​-21 ரக போர் விமானங்​கள் பங்​கேற்று நமது நாட்​டின் பெரு​மையை உயர்த்​தின. கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்​தானுடன் நடை​பெற்ற போரை யாரால் மறக்க முடி​யும்? தாகா​வில் உள்ள ஆளுநர் இல்​லத்​தின் மீது மிக்​-21 போர் விமானம் துல்​லிய தாக்​குதல் நடத்​தி, அதே நாளில் வெற்றி கிடைக்க வழி​வகுத்​தது.

பல தருணங்​களில் மிக்​-21 போர் விமானம் தனது திறனை நிரூபித்​துள்​ளது. அதனால் இந்த பிரி​யா​விடை நிகழ்ச்சி நமது நாட்​டின் பெரு​மை, வலிமை, தியாகம், சிறப்பு ஆகிய​வற்​றையெல்​லாம் நினைவு கூர்​கின்​றன. மிக்​-21 வெறும் வி​மானம் மட்​டும் அல்ல. இது இந்​தியா – ரஷ்யா இடையி​லான நீண்​ட மற்​றும்​ ஆழமான உறவுக்​கு சான்​றாக உள்​ளன. இவ்​வாறு மத்திய அமைச்சர் ராஜ்​நாத்​ சிங் கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.