சென்னை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்க தேர்தலை நவ.27-க்குள் நடத்தி முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பல ஆண்​டு​களாக நடத்​தப்​ப​டா​மல் உள்ள சென்னை வழக்​கறிஞர்​கள் கூட்​டுறவு சங்​கத்​தேர்​தலை, வரும் நவ.27-க்​குள் நடத்தி முடிக்க வேண்​டுமென உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, வழக்​கறிஞர் வி.ஆனந்த் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில், கடந்த 2018-ம் ஆண்டு தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் கூட்​டுறவு சங்​கம் பல ஆண்​டு​களாக செயல்​பட்டு வரு​கிறது.

இந்த சங்​கத்​துக்கு கடந்த பல ஆண்​டு​களாக தேர்​தல் நடத்​தப்​பட​வில்லை என்​ப​தால் சங்கமும் கேண்​டீனும் தற்​போது தனி அதி​காரி​யின் கட்​டுப்​பாட்​டில் நிர்​வகிக்​கப்​பட்டு வரு​கிறது. எனவே, இந்த கூட்​டுறவு சங்​கத்​துக்​கான தேர்​தலை உடனடி​யாக நடத்த உத்​தர​விட வேண்​டும், எனக்​ கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்​வு, சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் சங்​கம், மெட்​ராஸ் பார் அசோசி​யேஷன், லா அசோசி​யேஷன், பெண் வழக்​கறிஞர்​கள் சங்​கம் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் அடங்​கிய குழுவை அமைத்து வாக்​காளர் பட்​டியலை சரி​பார்த்​து, தேர்​தல் அதி​காரி மூல​மாக தேர்​தலை நடத்த உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், உயர் நீதி​மன்​றம் நியமித்த குழு வாக்​காளர் பட்​டியலை சரி​பார்த்த பின்​னரும் இந்த தேர்​தல் இது​வரை​யிலும் நடத்​தப்​பட​வில்லை எனக்​கூறி வழக்​கறிஞர் வி.ஆனந்த் மீண்​டும் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த வழக்கு நீதிபதி வி. லட்​சுமி நாராயணன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் சங்​கத் தலை​வ​ரான ஜி. மோக​னகிருஷ்ணனும் அரசு தரப்​பில் சிறப்பு அரசு வழக்​கறிஞர் கீதா தாமரை செல்​வனும் வாதிட்டனர். அதையடுத்து நீதிப​தி, தற்​போது அந்த குழு​வில் உள்ள வழக்​கறிஞர்​களான ஜி.மோக​னகிருஷ்ணன், வி.ஆர்​. கமல​நாதன், டி.​வி.கிருஷ்ணகு​மார், வி.நளினி ஆகியோர் வாக்​காளர் பட்​டியலை மீண்​டும் தனி அதி​காரி​யிடம் சமர்ப்​பிக்க வேண்​டும். தனி அதி​காரி அந்த பட்​டியலை வரும் அக்​.25-க்​குள் சரி​பார்த்து தேர்​தல் அதி​காரி​யிடம் வழங்க வேண்​டும். அதன்​படி தேர்​தல் அதி​காரி வரும் நவ.27-ம் தேதிக்​குள் இந்த சங்​கத்​துக்​கான தேர்​தலை நடத்​தி முடிக்​க வேண்​டும்​, என உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.