சென்னை: சென்னை மாநகராட்சியில் அரையாண்டிற்கான சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாள் என்றும் செலுத்த தவறும் பட்சத்தில் தனி வட்டி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு அரையாண்டிற்குரிய சொத்து வரியை, சொத்து உரிமையாளர்கள் இன்று செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி, மாதந்தோறும் விதிக்கப்படும் தனிவட்டி விதிப்பினை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி , நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்றவற்றில் உள்ள […]
