சென்னை; தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 14ந்தேதி தொடங்க உள்ள நிலையில், தலைமைச்செயலகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதித்துள்ள சென்னை மாநகர காவல்துறை, அதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக கண்ணாக்கவும் மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார். பொதுவாக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்காலங்களில், முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கண்களுக்கு படும் வகையில், பல அமைப்புகள், தொழிற் சங்கத்தினர் தங்களது குறைகளை சுட்டிக்காட்டி போஸ்டர் ஒட்டுவது வழக்கமாகும். இதை காணும் சட்டமன்ற உறுப்பினர்கள், […]
