ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் துர்காடா பகுதியை சேர்ந்தவர் தீப்தி (17 வயது). பிளஸ்-2 படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (19 வயது). ஒரே பகுதி என்பதால் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தசராவையொட்டி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் தீப்தி காக்கிநாடாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனை அறிந்த அசோக்கும் அங்கு சென்றார்.
பின்னர் தீப்தியை தனியாக வருமாறு அசோக் அழைத்துள்ளார். உடனே தீப்தி அந்த பகுதியில் உள்ள காட்டேறு கால்வாய்க்கரை அருகே சென்றார். காதலியின் வருகைக்காக காத்திருந்த அசோக், திடீரென கையில் வைத்திருந்த பிளேடால் தீப்தியின் கழுத்தை அறுத்தார். இதில் நிலைகுலைந்த அவர், ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். சிறிதுநேரத்தில் தீப்தி இறந்தார்.
உடனே அங்கிருந்து சென்ற அசோக், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் காதலியை கொன்று வாலிபர் தற்கொலை செய்ததற்காக காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.