மோகன் பாகவத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: ஆர்​எஸ்​எஸ் நூற்​றாண்டு விழா​வில் பேசிய அந்த அமைப்​பின் தலை​வர் மோகன் பாகவத்​துக்கு பிரதமர் நரேந்​திர மோடி பாராட்டு தெரி​வித்​துள்​ளார்.

கடந்த 1925-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட ஆர்​எஸ்​எஸ் அமைப்பு நூற்​றாண்டு விழாவை கொண்​டாடி வரு​கிறது. இந்​நிலை​யில், மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் உள்ள அதன் தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்ற வரு​டாந்​திர விஜயதசமி விழா​வில், அந்த அமைப்​பின் தலை​வர் மோகன் பாகவத் பேசும்​போது, “பழங்​காலத்​தில் நமது சமு​தா​யத்​தில் சிறந்த தனி​நபர்​களை உரு​வாக்​கும் முறை இருந்​தது. இது வெளி​நாட்​டினரின் ஊடுரு​வல் காரண​மாக அழிக்​கப்​பட்​டது. சுதந்​திரத்​துக்​குப் பிறகு ஆர்​எஸ்​எஸ் அமைப்பு அந்த முறையை மீண்​டும் உரு​வாக்​கியது. கடந்த 100 ஆண்​டு​களாக, சங்​கத்​தின் நிர்​வாகி​கள் எந்​தச் சூழ்​நிலை​யிலும் அந்த முறையைத் தொடர்ந்து பேணிக் கொண்டு வந்​துள்​ளனர்.

அமெரிக்கா கொண்டு வந்த புதிய வரி கொள்கை அவர்​கள் நலனை கருத்​தில் கொண்டு அமல்​படுத்​தப்​பட்​டது. உலக நாடு​கள் ஒன்​றின் மீது ஒன்று சார்ந்தே இயங்​கு​கிறது. அதே​நேரம் இந்த சார்பு கட்​டாய​மாக மாறக்​கூ​டாது. அதனால், நாம் சுதேசி வழியைக் கடைப்​பிடித்​து, தன்​னிறைவு மீது கவனம் செலுத்த வேண்​டும். அதே​நேரம், நமக்​குத் தோழமை​யாக உள்ள அனைத்து நாடு​களு​ட​னும் தூதரக உறவு​களைப் தொடர வேண்​டும்” என்​றார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்​திர மோடி தனது எக்ஸ் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “டாக்​டர் மோகன் பாகவத் உரை ஊக்​கமளிக்​கும் வகை​யில் இருந்​தது. நாட்டை கட்​டமைப்​ப​தில் ஆர்​எஸ்​எஸ் அமைப்பு செய்த முக்​கிய பங்​களிப்பை எடுத்​துரைத்​தார். மேலும் பல புதிய உச்​சங்​களை அடைந்து மகத்​து​வம் பெறும் திறன் நமது மண்​ணுக்கு உள்​ளது என்​றும் இதனால் முழு உலக​மும் பயன் பெறும் என்​றும் அவர் சுட்​டிக் காட்​டி​னார்” என கூறி​யுள்ளார்.

ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் நூற்​றாண்டை முன்​னிட்​டு, மத்​திய கலாச்​சார அமைச்​சகம் சார்​பில் 100 ரூபாய் நினைவு நாண​யம் மற்​றும் சிறப்பு அஞ்​சல் தலையை பிரதமர் மோடி வெளி​யிட்​டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.