வானிலை முன்னறிவிப்பு: சென்னை, காஞ்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் சென்னை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நாளை (அக்.4) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நாளை (அக்.4) முதல் அக்.9-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (அக்.4) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், அக்டோபர் 5-ம் தேதி நாளை மறுநாள் மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (அக்.4) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போவது கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, சென்னை அடையாறு, வேளச்சேரி, மாதவரம், விமான நிலையம், கொரட்டூர், காசிமேடு, ஆலந்தூர், தண்டையார் பேட்டை, அயப்பாக்கம், கொரட்டூர், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, கும்மிடிப்பூண்டியில் தலா 3 செ.மீ மழை, மதுரை தானியமங்களம், கள்ளந்திரி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு உள்ளிட்ட இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.