பெங்களூரு | படுக்கை அறையில் ரகசிய கேமரா: கணவர் மீது மனைவி புகார்

பெங்களூரு: பெங்​களூரு​வில் படுக்கை அறை​யில் ரகசிய கேமரா வைத்து மனை​வி​யின் அந்​தரங்க வீடியோவை பதிவு செய்த கணவர் மீது போலீ​ஸார் வழக்கு பதிந்​துள்​ளனர்.

பெங்​களூரு​ புட்​டேனஹள்​ளியை சேர்ந்த 27 வயதான பெண் போலீ​ஸில் அளித்த புகாரில் கூறி​யிருப்​ப​தாவது: எனக்​கும் புட்​டேனஹள்​ளியை சேர்ந்த சையத் இனா​முல் (35) என்​பவருக்​கும் கடந்த ஆண்டு டிசம்​பரில் திரு​மணம் ஆன‌து. வரதட்​சணை​யாக 340 கிராம் நகை, இரு சக்கர வாக​ன​மும் கொடுத்​தோம். பின்னர் என் கணவர் சையத் இனா​முலுக்கு ஏற்​கெனவே திரு​மண​மானது தெரிய​வந்​தது.

இதுகுறித்து அவரிடம் கேட்​டபோது, என்னை தாக்​கி​னார். மேலும் படுக்கை அறை​யில் ரகசிய கேமரா வைத்து அவர் என்​னோடு நெருக்​க​மாக இருப்​பதை வீடியோ​வாக பதிவு செய்​துள்​ளார். மேலும் அவருக்கு 19 பெண்​களு​டன் தொடர்பு இருப்​பது தெரிய​வந்​தது.

அவர் என்​னுடன் நெருக்​க​மாக இருக்​கும் வீடியோவை வெளி​நாடு​களில் உள்ள நண்​பர்​களு​டன் பகிர்ந்​துள்​ளார். வெளி​நாடு​களில் இருந்து அவர்​கள் பெங்​களூரு வரும்​போது என்னை அவர்​களு​டன் பாலுறவு வைத்​துக் கொள்​ளும்​படி வலி​யுறுத்​தி​னார்.

இதற்கு மறுத்​த​தால் எனது கணவரும், அவரது பெற்​றோரும் என்னை கடுமை​யாக தாக்கி துன்​புறுத்​துகின்​றனர். இவ்​வாறு புகாரில் கூறப்​பட்டு உள்​ளது. இதுகுறித்து சையத் இனா​முல், அவரது பெற்​றோர் உட்ப‌ட 4 பேர் மீது போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து தலைமறை​வான சையதை தேடி வரு​கின்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.