India vs Australia ODI Series: இந்திய அணி தற்போது மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் தற்போது நடைபெற்று வரும் நிலையில், 2வது டெஸ்ட் வரும் அக். 10ஆம் தேதி தொடங்கி, அக். 14இல் நிறைவடையும்.
Add Zee News as a Preferred Source
India vs Australia: விராட், ரோஹித் கம்பேக்
இந்த தொடர் முடிந்ததும், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரிலும் இந்திய அணி விளையாட இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு இந்த தொடரின் மூலம் திரும்புகின்றனர்.
India vs Australia: ஓடிஐ, டி20ஐ போட்டிகள் எப்போது?
முதலில் ஓடிஐ தொடர் நடைபெற இருக்கிறது. அக். 19இல் பெர்த், அக். 23இல் அடிலெய்ட், அக். 25இல் சிட்னி மைதானங்களில் முறையே மூன்று ஓடிஐ போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அதன்பின் அக். 29, அக். 31, நவ. 2, நவ. 6, நவ. 8 ஆகிய நாள்களில் முறையே 5 டி20ஐ போட்டிகள் நடைபெறுகின்றன. ஓடிஐ தொடரையும் விட டி20ஐ தொடர்தான் மிக முக்கியமானதாகும். ஏனென்றால் அடுத்தாண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
India vs Australia: ஸ்குவாட் இன்று அறிவிப்பு?
இருப்பினும், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சர்வதேச போட்டிகளுக்கு திரும்புவதால் ஓடிஐ தொடரும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அந்த வகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஓடிஐ தொடருக்கான இந்திய ஸ்குவாட் இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்வார் என கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய அணிக்கும், இதற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது என கூறப்படுகிறது.
India vs Australia: இந்த 3 வீரர்களுக்கு ஓய்வு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு சுப்மான் கில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டி20ஐ தொடரை கணக்கில் கொண்டும், அடுத்து நவம்பர் – டிசம்பரில் நடைபெறும் தென்னாப்பிரிக்கா தொடரை கணக்கில்கொண்டும் அவர்களுக்கு ஓய்வளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
BIG UPDATE ON INDIA ODI SQUAD Vs AUSTRALIA
– India might consider resting Shubman Gill, Jasprit Bumrah & Kuldeep Yadav for ODI series Vs Australia. If they picked for ODI series, they could be released midway through the T20I series. (ESPNcricinfo). pic.twitter.com/UdIs9SS9QR
— Tanuj (@ImTanujSingh) October 4, 2025
India vs Australia: என்ன காரணம்?
ஒருவேளை, பும்ரா, சுப்மான் கில், குல்தீப் யாதவ் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேர்வு செய்யப்பட்டால் அவர்கள் டி20ஐ தொடரில் விளையாட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, இவர்கள் மூவரும் டி20ஐ, ஓடிஐ, டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து விளையாடி வருபவர்கள். நவம்பரில் தென்னாப்பிரிக்க அணி இந்தியா வந்து, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஓடிஐ போட்டிகள், 5 டி20ஐ போட்டிகளில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.