இந்தியாவுக்கு எதிராக பேசிய ராகுல் காந்தியின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டும்: பாஜக எம்.பி. நிஷிகாந்த் வலியுறுத்தல்

புதுடெல்லி: தென் அமெரிக்க நாடான கொலம்​பி​யா​வில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி 2 நாட்​களுக்கு முன்​னர் சுற்​றுப் பயணம் மேற்​கொண்​டார். அப்​போது இஐஏ பல்​லைக்​கழகத்​தில் மாணவர்​களு​டன் ராகுல் காந்தி உரை​யாடி​னார்.

அப்​போது அவர் பேசும்​போது, ‘‘இந்​தி​யா​வில் பல மதங்​கள், மொழிகள், கலாச்​சா​ரங்​கள் உள்​ளன. ஜனநாயக அமைப்பு அனை​வருக்​கும் இடமளிக்​கும் ஒரு தளமாக செயல்​படு​கிறது. தற்​போது, அந்த ஜனநாயக அமைப்பு பாஜக தலை​மையி​லான அரசின் கீழ் பல திசைகளில் இருந்​தும் தாக்​குதலுக்கு உள்​ளாகி வரு​கிறது. இது​தான் இந்​தி​யா​வுக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தலாக உள்​ளது’’ என்று குற்​றம் சாட்​டி​னார்.

இதற்கு பாஜக எம்​.பி. நிஷி​காந்த் துபே கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் பேசிய நிஷி​காந்த் கூறிய​தாவது:

அடிப்​படை இல்​லாத விஷ​யங்​களை எல்​லாம் ராகுல் காந்தி வெளி​நாட்​டில் பேசி வரு​கிறார். வெளி​நாட்​டில் இருந்து கொண்டு இந்​திய அரசின் மீது சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசுகிறார். அந்த பேச்​சுகள், இந்​திய அரசி​யலமைப்பு சட்​டம் மற்​றும் அரசு கொள்​கைகளைப் பற்றி வெளி​நாட்டு தீய சக்​தி​கள் வெளி​யிடும் கருத்​துகளுக்கு ஒப்​பானவை. மலேசி​யா​வில் இருந்து கொண்டு இந்​தி​யா​வுக்கு எதி​ராக ஜாகிர் நாயக் (பிஎப்ஐ) பேசுவதும், கனடா​வில் இருந்து கொண்டு காலிஸ்​தான் தீவிர​வாதி பன்னு பேசுவதற்​கும் ஒப்​பானது ராகுல் காந்​தி​யின் பேச்​சு.

ராகுல் காந்​திக்கு வழங்​கப்​பட்​டுள்ள தூதரக பாஸ்​போர்ட்டை பறி​முதல் செய்ய வேண்​டிய நேரம் வந்​து​விட்​டது என்று நினைக்​கிறேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். லடாக்​கில் பரு​வநிலை பாது​காப்பு ஆர்​வலர் சோனம் வாங்​சுக் கைது செய்​யப்​பட்​டதற்கு காங்​கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளது. லடாக்​கில் ஏற்​பட்ட வன்​முறை​யில் வாங்​சுக் பின்​னணி​யில் வெளி​நாட்டு சதி உள்​ளது வெளிப்​படை​யாக தெரிய வந்​துள்​ளது. அதனால் அவரை என்ஐஏ கைது செய்​துள்​ளது. இதை காங்​கிரஸ் எதிர்க்​கிறது. இவ்​வாறு நிஷி​காந்​த்​ துபே கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.