கரூர் விவகாரத்தில் பொறுப்புடன் செயல்படும் முதல்வர் ஸ்டாலின்: டிடிவி தினகரன் கருத்து

தஞ்சாவூர்: அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன். தஞ்​சாவூரில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது:

கரூர் விவ​காரத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பொறுப்​புட​னும், நிதான​மாக​வும் செயல்​பட்டு வரு​கிறார். யாரை​யும் கைது செய்ய வேண்​டும் என்ற நோக்​கம் முதல்​வருக்கு இல்லை என்று தெரி​கிறது. 41 பேர் அநி​யாய​மாக உயிரிழந்​துள்​ளனர். இது தொடர்​பாக குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​து, கைது செய்ய வேண்​டிய அவசி​ய​மும் அரசுக்கு உள்​ளது. ஆனால், விஜய் கைது செய்​யப்பட​வில்​லை.

நான் அரசுக்கு ஆதர​வாகப் பேச​வில்​லை. நடுநிலை​யாகப் பார்க்​கும்​போது, எல்​லாம் சரி​யாக தான் நடக்​கிறது. தவெக​வும் திட்​ட​மிட்டு செய்​ய​வில்​லை. நிர்​வாகி​களுக்கு அனுபவம் குறைவு என்​ப​தால் விபத்து​ நடந்​துள்​ளது.

விஜய் தார்​மிகப் பொறுப்பு ஏற்​றிருந்​தால், நீதி​மன்​றம் கண்​டனம் தெரி​வித்​திருக்​காது. ஆனால், தங்​களின் மீது பழி வந்​து​விடும் என ஆலோ​சகர்​களோ, வழக்​கறிஞர்​களோ கூறிய​தால், விஜய் அமை​தி​யாக இருக்​கிறார் என்று நான் கருதுகிறேன். இவ்​விவ​காரத்​தில் பல தலை​வர்​கள் நிதான​மாக பேசி​னார்​கள். ஆனால், எம்​.பி.க்​கள் குழு அமைத்​து, பழனி​சாமிக்கு நிக​ராக பாஜக அரசி​யல் செய்​வது வருத்​தம் அளிக்​கிறது. தூத்​துக்​குடி சம்​பவத்​தின்​போது இது​போன்று எந்​தக் குழு​வும் வரவில்​லை.

இதை வருங்​காலத்​துக்கு ஒரு பாட​மாக எடுத்​துக்​கொள்ள வேண்​டும். விஜய் அரசி​யலுக்​குப் புதி​ய​வர். அவரைச் சுற்றி இருப்​பவர்​களும் அரசி​யல் அனுபவம் இல்​லாதவர்​களாக இருப்​ப​தால், இது​போன்ற தவறு ஏற்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.