விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் விழுப்புரத்தில் இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கேங்மேன்களை கள உதவியாளர்களாக மாற்றக் கோரி மாநிலம் முழுவதும் 12 மையங்களில் காத்திருப்பு போராட்டத்தை மின்வாரிய ஊழியர்கள் தொடங்கி உள்ளனர். விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் இரண்டாவது நாளாக இன்று (அக்.8) காலை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின் வாரியத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதவி உயர்வு […]
