இந்தியாவின் மிகப் பெரிய மல்டிபிளெக்ஸ் நிறுவனமான PVR INOX, தனது பிரத்தியேகமான ‘டைன்-இன் சினிமா’ (Dine-in Cinema) கான்செப்டை தற்போது பெங்களூரில் கொண்டு வந்திருக்கிறது.
திரையரங்கில் சாப்பிட்டபடி படம் பார்ப்பது ஒன்றும் நமக்குப் புதிதில்லை. ஆனால், ஹோட்டலில் ரவுண்டு டைனிங் டேபிளில் நான்குபேர் சுற்றி உட்கார்ந்தபடி படம் பார்ப்பதுதான் புதிய அனுபவமாக இருக்கிறது.
5 ஸ்டார் ஹோட்டலில் டைனிங் டேபிளில் நண்பர்கள், குடும்பத்தோடு சாப்பிட்டபடி ‘PPT’ பிரசன்ட்டேஷன், மீட்டிங் அட்டென்ட் பண்ணியிருப்போம். அதேபோல படம் பார்க்கும் அனுபவத்தைக் கொண்டுவந்திருக்கிறது ‘PVR INOX’. இதோடு கேட்டதை உடனே சமைத்துத் தரும் ‘லைவ் கிச்சன்’ அமைப்பையும் கூடுதலாகக் கொண்டு வந்திருக்கிறது.

படம் பார்க்கும் அனுபவம் எப்படி?
சரி, இருட்டிலா உட்கார்ந்து படம் பார்ப்பது என்ற கேள்வி வருகிறது. திரையைத் தவிர, சாப்பிடும் டேபிளில் மட்டும் மெல்லிய LED ஒளி விளக்குகளைப் பரவவிட்டிருக்கிறார்கள். அது படம் பார்க்கும் அனுபவத்தைக் கெடுக்காது என்கிறார்கள்.
தியேட்டரில் கொஞ்சம் சத்தம் கேட்டாலும், சீட் தேடுவதற்கு மொபைல் லைட்டை அடித்தாலும் அசௌகரியமாகும், படம் பார்க்கும் அனுபவத்தையே அது கெடுத்துவிடும். பாப்கார்ன் குலுக்கும் சத்தமே சிலருக்கு இரைச்சல்தான்.

டிக்கெட் விலை என்ன?
இந்த டைன்-இன் திரையரங்குகளுக்கான டிக்கெட் விலை, இருவர் அமரும் மேசைக்கு ₹250 என்றும், நால்வர் மேசைக்கு சுமார் ₹800-₹900 என்றும் சொல்கிறார்கள்.
சாதாரணமாக பாப்கார்ன் விலையே கண்ணை கட்டும். இதில் லைவ் கிச்சன் என்றெல்லாம் வைத்து எவ்வளவு வசூலிக்கப்போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.
கார்ப்பரேட் புக்கிங், காமெடி ஷோக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கலாம்.
ஆனால், சிறந்த படம் பார்க்கும் அனுபவத்தைத் தருமா என்றுதான் தெரியவில்லை. இப்போது பெங்களூரில் வந்திருக்கும் இந்த ‘டைன்-இன் சினிமா’ இன்னும் 6 மாதங்களில் பல மாநிலங்களில் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது PVR.
இந்த ‘Dine in Cinema’ அனுபவம் எப்படியிருக்கும் என்பதை கமெண்டில் சொல்லுங்கள்!