பெங்களூரு மற்றும் எர்ணாகுளம் இடையிலான புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நவம்பர் மத்தியில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த வாரம் மூன்று சேவை ரயில் நிறுத்தப்பட்டு ஓராண்டு ஆன நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பாஜக தலைவர்களுடனான சந்திப்பின் போது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். பாலக்காடு வழியாக இயக்கப்படும் இந்த அரை-அதிவேக ரயில், திருச்சூர், பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர், […]
