Diwali Dhamaka Offer: 80% தள்ளுபடியில் சாம்சங் 55-இன்ச் 4K LED டிவி விற்பனை

Samsung 55 inch 4K LED TV: தற்போது, ​​தீபாவளி தமாக்கா சலுகை பிளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட அனைத்து வர்த்தக வலைத்தளங்களிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சலுகையின் கீழ், அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் 80% வரை மிகப்பெரிய தள்ளுபடிகள் கிடைக்கும். அதன்படி முழு ரூபாய் 35,000 தள்ளுபடியுடன் Samsung 4K LED ஸ்மார்ட் டிவியை எப்படி ஆன்லைனில் வாங்குவது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Add Zee News as a Preferred Source

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் விற்பனை:

இந்தியாவின் மிகவும் பிரபலமான இ-காமர்ஸ் நிறுவனமான Flipkart, அதன் பிக் பேங் தீபாவளி விற்பனை 2025 (Big Bang Diwali Sale) இன்று முதல் அதாவது அக்டோபர் 11 முதல் தொடங்குகிறது. இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டேப்லெட்டுகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு சாதனங்கள், ஆடியோ சாதனங்கள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படும். குறிப்பாக, பிளிப்கார்ட் SBI வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது, இதன் காரணமாக SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் 10% வரை உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். இது தவிர, கட்டணமில்லா EMI மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக சேமிக்க வாய்ப்பளிக்கும்.

மறுபுறம் இ-காமர்ஸ் தளமான அமேசானில் இரண்டாம் கட்டமாக Amazon Great indian festival தீபாவளி ஸ்பெஷல் சேல் தொடங்கியுள்ளது, இந்த தீபாவளி அதிக விலை கொண்ட பல பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம். அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தீபாவளி சிறப்பு விற்பனையின் போது, ​​ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆஃபர்ஸ் பரோடா, IDFC பேங்க் , RBL பேங்க் மற்றும் மற்றும் பல கார்டுகளைப் பயன்படுத்தி தள்ளுபடிகள் கிடைக்கும். அமேசான் பே ICICI பேங்க் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தினால் 5 சதவீத அன்லிமிடெட் கேஷ்பேக் பெறலாம்.

55-இன்ச் ஸ்மார்ட் LED டிவி

இந்நிலையில் நீங்கள் ஒரு குறைந்த பட்ஜெட்டில் 55-இன்ச் ஸ்மார்ட் LED டிவியை வாங்க விரும்பினால், சாம்சங்கின் LED டிவி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். எனவே, இப்போது இதன் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

அனைத்து ஸ்மார்ட் அம்சங்களையும் பெறலாம்

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இரு தளங்களும் தற்போது தீபாவளி விற்பனையை தொடங்கி நடத்தி வருகின்றன, இதில் மின்னணு சாதனங்களுக்கு 80% வரை மிகப்பெரிய தள்ளுபடியை வழங்கப்படுகின்றன. சாம்சங்கின் 55-இன்ச் 4K LED டிவி தற்போது தள்ளுபடியில் உள்ளது, இதன் மூலம் நீங்கள் ரூபாய் 35,000 வரை சேமிக்க முடியும். இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 55-இன்ச் QLED 4K அல்ட்ரா HD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

கூடுதலாக, இது Tizen OS, Alexa assist, 100க்கும் மேற்பட்ட இலவச சேனல்கள், Wi-Fi மற்றும் Bluetooth இணைப்பு மற்றும் பல ஸ்மார்ட் அம்சங்களுடன் வருகிறது.

ரூ.35000 க்கு சிறப்பான தள்ளுபடி

முன்னதாக குறிப்பிட்டது போல, இந்த Samsung 4K LED TV தீபாவளி விற்பனையின் போது ரூபாய் 35,000 மிகப்பெரிய தள்ளுபடியைப் பெறலாம். அதன் பிறகு, நீங்கள் Amazon மற்றும் Flipkart தளத்தில் இருந்து 23,499 ரூபாய்க்கு வாங்கலாம்.

About the Author


Vijaya Lakshmi

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.