டேங்கர் லாரி வேலை நிறுத்தப் போராட்டத்தால் சிலிண்டர் விநியோகம் பாதிக்காது: இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி 

சென்னை: டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் அறி​வித்​துள்ள வேலைநிறுத்​தத்​தால் சிலிண்​டர் விநியோகத்​தில் பாதிப்பு ஏற்​ப​டாது என இந்​தி​யன் ஆயில் நிறு​வனம் உத்​தர​வாதம் அளித்​துள்​ளது.

எண்​ணெய் நிறு​வனங்​கள் அறி​வித்​துள்ள காஸ் டெண்​டரில், தகு​தி​யான அனைத்து டேங்​கர் லாரி​களுக்​கும் அனு​மதி வழங்​கக்​கோரி தென் மண்டல எல்​பிஜி காஸ் டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் சங்​கத்​தினர், கடந்த 9-ம் தேதி இரவு முதல் வேலைநிறுத்​தம் தொடங்கினர்.

இதையொட்​டி, இந்​தி​யன் ஆயில் நிறு​வனத்​தின் தென்​மண்டல அலு​வல​கம் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: எந்​த​வித முன்​னறி​விப்​பும் இன்றி வேலைநிறுத்​தத்தை தொடங்​கி​யிருப்​பது சட்​ட​விரோத​மாகும். அரசின் அனைத்து வழி​காட்​டு​தல்​களை​யும் செயல்​படுத்​தி, அனை​வரை​யும் உள்​ளடக்​கிய வகை​யிலேயே, எண்​ணெய் நிறு​வனங்​கள் வர்த்​தகத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றன. எதிர்​பா​ராத சூழல் உரு​வான போதும் கூட, மத்​திய ட்​ரோலி​யம் மற்​றும் எரிவாயு அமைச்​சகத்​தின் கீழ், தென்​னிந்​தி​யா​வில் எல்​பிஜி விநியோகத்​தில் எந்த பாதிப்​பும் இருக்​காது.

வரும் பண்​டிகை காலத்தை எதிர்​கொள்​ளும் வகை​யில் இண்​டேன், பாரத் காஸ், எச்பி விநியோகஸ்​தர்​கள் தேவைக்​கேற்ப சிலிண்​டர்​களை இருப்​பில் வைத்​துள்​ளனர். இதனை எண்​ணெய் நிறு​வனங்​கள் கண்​காணித்​தும் வரு​கின்​றன. இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

ஐஓசி சார்பில் வழக்கு டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் அறி​வித்​துள்ள கால​வரையற்ற வேலை நிறுத்​தப் போராட்​டத்​துக்கு தடைகோரி இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் நிறு​வனம் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக, இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் நிறு​வனத்​தின் தலைமை பொது மேலா​ளர் அனுப் குமார் சமந்த்​ராய் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்​ளார்.

அதில், எல்​பிஜி காஸ் டேங்​கர் லாரி உரிமை​யாளர்​களின் கால​ வரையற்ற வேலை நிறுத்​தப் போராட்​டத்​தால் கோடிக்​கணக்​கில் நிதி இழப்பு ஏற்​படு​வதுடன், பொது​மக்​களும் காஸ் விநி​யோகம் கிடைக்​காமல் கடுமை​யாக பாதிக்க நேரிடும் என்​ப​தால் அந்த போ​ராட்​டத்தை சட்​ட​விரோதம் என அறி​வித்து அதற்கு தடைவி​திக்க வேண்​டும், எனக் கோரப்​பட்​டுள்​ளது. இந்​த மனு நாளை வி​சா​ரணைக்​கு வர உள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.