ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தை சேர்ந்த மன்கத் சிங் என்பவரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த இஷா சர்மா என்ற பெண்ணுடன் ஆன்லைனில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பை சேர்ந்தவர் ஆவார். ‘ஹனி டிராப்’ எனப்படும் ஆளை மயக்கி அவரிடமிருந்து தகவல்களை பெறுவதுதான் இந்த உளவாளிகளின் வேலை.
அந்த பெண்ணிடம் மயங்கிய மன்கத் சிங், ராஜஸ்தானில் செயல்பட்டு வரும் ராணுவ, விமானப்படை தளங்கள் தொடர்பான தகவல்களை இஷா சர்மாவிடம் அவர் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ராஜஸ்தான் போலீஸார் மன்கத் சிங்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.