திருப்பதி: ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டம், யாடிகி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி. இவரது 4 வயது மகன் ஹ்ருத்திக் தண்ணீர் என நினைத்து பிளாஸ்கில் இருந்த சூடான டீயை வாயில் ஊற்றி ‘மடக்’கென குடித்துள்ளான்.
இதில் அலறி துடித்த சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை ஹ்ருத்திக் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். சூடாக டீயை அருந்தியதால் சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.