மதுரை: “மதுவிலக்குத்துறை அமைச்சரை `சாராய அமைச்சர்' என்று சொன்னால் கோபம் வருகிறது'' – அண்ணாமலை

நயினார் நாகேந்திரன் பிரசார பயணம்

‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசார பயணத்தை மதுரையில் தொடங்கினார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

கூட்டத்தில்

நேற்று மாலை மதுரை அண்ணா நகரில் நடைபெற்ற பிரசாரப் பயணம் தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகனுடன், கூட்டணி கட்சித் தலைவர்கள் ஜி.கே.வாசன், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

அண்ணாமலை பேச்சு

முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது, “மழை வந்துவிடும் என்றேன், வராது, நீங்கள் 5 நிமிடமாவது பேச வேண்டும் என நயினார் நாகேந்திரன் என்னிடம் கூறினார்.

167 தொகுதிகளைத் தாண்டி எடப்பாடி பழனிசாமியின் யாத்திரை நடந்துள்ளது, 67 தொகுதி மீதியுள்ளது நயினார் நாகேந்திரன் 67 கட்சி மாவட்டங்கள் வாரியாக செல்கிறார். ஆட்சி மீது கோபத்தில் உள்ள மக்களை சந்திக்க வேண்டும்.

நிகழ்ச்சியில்
நிகழ்ச்சியில்

மீண்டும் ஆட்சியமைப்போம் என திமுகவினர் இறுமாப்பாக உள்ளனர். பணத்தை கொடுத்துவிடலாம், பெண்களுக்கு 1000 கொடுத்துள்ளதால் வாக்குகள் வரும் எனவும், எதிர்ப்பு வாக்குகள் சிதறும் என்றும் நினைக்கிறார்கள், கண்ணாடி கூண்டிலிருந்து திமுக கல்லை வீசி வருகின்றனர்.

நான்கரை ஆண்டுகளில் 88 பேர் கள்ளச்சாரயத்தில் இறந்துள்ளனர், இந்த அவமானம் தமிழகத்தில்தான்.

கரூரில் 41 பேர் உயிரிழந்தனர். என்ன பாவம் செய்தார்கள், அந்த கூட்டத்தில் 100 காவல்துறையினர் கூட பாதுகாப்பில் இல்லை, ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி மரணத்திற்கு உயர் அதிகாரிகள் தலைமயில் ஏராளமான போலீசாரை அனுப்பி பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.

நான்கரை ஆண்டுகளில் நடந்த மாற்றம்

கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகம் மாறியுள்ளது என்கிறார்கள். ஆம் மாறியுள்ளது, வேட்டி கட்டிய முதலமைச்சர் தன்னை இளைமையாக காட்டிக்கொள்ள இப்போது பேண்ட் போடுகிறார்.

வெளிநாட்டில் புட்பால் விளையாண்ட பேரன் இன்பநிதி் நடிகராக வரவுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தினசரி நாயோடு தான் போட்டோ போடுவார், அந்த நாய்க்கு மீசை கருப்பாக இருந்தது, இப்போது வெள்ளையாக மாறிவிட்டது, இதுதான் நான்கரை ஆண்டுகளில் நடந்த மாற்றம்.

நோயாளிகளை மருத்துவ பயனாளர்கள் என சொல்வதுதான் மாற்றமாம். ஆனால் மதுவிலக்குத்துறை அமைச்சரை சாராய அமைச்சர் என்று சொன்னால் கோபம் வருகிறது.

கருணாநிதி பெயரில் சாலை, சிலை, பாராட்டு விழா நடத்துவார்கள், இதைத் தவிர நான்கரை ஆண்டுகளில. எதுவும் நடக்கவில்லை.

அடுத்த முதலமைச்சராக 2026 ல் ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என மோடி முடிவுசெய்து கூட்டணி அமைந்துள்ளது.

நிகழ்ச்சியில்

`டெல்லிக்கு போனாலே வம்பு சண்டை’

தியேட்டருக்கு செல்லுங்கள் படம் பாருங்கள் சினிமாவில் நடிப்பவர்கள் நன்றாக ஆளுவார்கள் என நினைத்தால் அது சரியல்ல, இந்த யாத்திரை நிச்சயம் வெற்றி பெறும்.

குழந்தைகள், பெண்கள் இந்த யாத்திரைக்கு வந்தால் பாதுகாப்பாக திரும்பி செல்வார்கள், டெல்லிக்கு போனாலே வம்பு சண்டை போடுகிறார்கள்.

காஞ்சிபுரத்தில் இருந்து சென்ற இருமல் மருந்து சாப்பிட்டு 26 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தில் உள்ள இரு மருத்துவ அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்கிறார்கள், நான்கரை ஆண்டுகளில் அந்த நிறுவனத்தில் ஆய்வு செய்யவில்லை.

ரிவ்யூ மீட்டிங் நடத்த தெரியாதவராக பொம்மை முதலமைச்சராக உள்ளார். அவரின் குடும்ப வளர்ச்சிக்கு மட்டும் பாடுபடுகிறார். நமக்கு இது கடைசி் வாய்ப்பு, அரிய வாய்ப்பு. தவற விட்டுவிடாதீர்கள். கட்சி சார்பில்லாத மனிதரை இந்த யாத்திரைக்கு அழைத்து வர வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.