லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பதோஹியில் 4-வது தரைவிரிப்பு கண்காட்சியை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்றுமுன்தினம் தொடங்கி வைத்து பேசியதாவது:
இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது. ஆனால் அது ஒரு நாட்டின் முடிவு. இதையடுத்து நாம் 10 நாடுகளுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்தி உள்ளோம்.
குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது நமது தொழில் துறைக்கு புதிய வாய்ப்புகளை திறந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.