புதிய குற்றவியல் சட்டங்களால் நீதித் துறையில் புரட்சி: அமித் ஷா கருத்து

ஜெய்ப்​பூர்: புதிய குற்​ற​வியல் சட்​டங்​களால் நீதித் துறை​யில் புரட்சி ஏற்​பட்​டிருக்​கிறது என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெரிவித்துள்​ளார்.

ராஜஸ்​தான் மாநில தலைநகர் ஜெய்ப்​பூரில் உள்ள ஜேஇசிசி மையத்​தில் புதிய குற்​ற​வியல் சட்​டங்​கள் தொடர்​பான கண்​காட்சியை நேற்று தொடங்​கி வைத்​து மத்திய அமைச்​சர் அமித் ஷா பேசி​ய​தாவது: பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான மத்​திய அரசு புதிய குற்​ற​வியல் சட்​டங்​களை அமல்​படுத்தி உள்​ளது.

இதன்மூலம் நீதித் துறை​யில் மிகப்​பெரிய புரட்சி ஏற்​பட்​டிருக்​கிறது. இதன்​படி வரும் 2027-ம் ஆண்​டுக்​குப் பிறகு ஒரு வழக்கு பதிவு செய்​யப்​பட்​டால் அந்த வழக்கு மீது மிக விரை​வாக விசா​ரணை நடை​பெறும். நிர்​ண​யிக்​கப்​பட்ட காலத்​துக்​குள் வழக்​கு​கள் விசா​ரணை​கள் நிறைவு பெற வேண்​டும்.

புதிய குற்​ற​வியல் சட்​டங்​களால் ராஜஸ்​தானில் சட்​டம் ஒழுங்கு மேம்​பட்​டிருக்​கிறது. முந்​தைய காலத்​தில் ராஜஸ்​தானில் 100 பேர் கைது செய்​யப்​பட்​டால் 42 பேர் மட்​டுமே தண்​டனை பெற்​றனர். புதிய குற்​ற​வியல் சட்​டங்​கள் அமலுக்கு வந்த பிறகு ராஜஸ்​தானில் 60 பேருக்கு தண்​டனை விதிக்​கப்​படு​கிறது. வரும் காலத்​தில் இந்த எண்​ணிக்கை 90 ஆக அதி​கரிக்​கும் என்று உறு​தி​யாக நம்​பு​கிறேன்.

கடந்த 2014-ம் ஆண்​டுக்கு முன்பு உலகின் மிகப்​பெரிய பொருளா​தார நாடு​கள் பட்​டியலில் இந்​தியா 11-வது இடத்​தில் இருந்​தது. தற்​போது 4-வது இடத்​துக்கு முன்​னேறி உள்​ளோம். விரை​வில் 3-வது இடத்தை எட்​டிப் பிடிப்​போம். வரும் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்​தியா உரு​வாக்​கப்​படும்.

கடந்த ஆண்டு டிசம்​பரில் ‘ராஜஸ்​தான் எழுச்சி அடைகிறது’ என்ற பெயரில் மாநாடு நடை​பெற்​றது. அப்​போது 35 லட்​சம் கோடி அளவுக்கு பல்​வேறு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. இதுகுறித்து காங்​கிரஸ் மூத்த தலை​வர் அசோக் கெலாட் விமர்​சனங்​களை முன்​வைத்​திருக்​கிறார்.

முதல்​வர் பஜன்​லால் சர்மா ஆட்​சி​யில் மிக குறுகிய காலத்​தில் ரூ.7 லட்​சம் கோடி அளவி​லான ஒப்​பந்​தங்​கள் அமல் செய்​யப்​பட்டு உள்​ளன. விரை​வில் அனைத்து ஒப்​பந்​தங்​களும் நடை​ முறைக்கு வரும். இதன்​ மூலம் ராஜஸ்​தான் அபரிமி​தமாக வளர்ச்சி அடை​யும். வரும் டிசம்​பரில் மீண்​டும் ‘ராஜஸ்​தான் எழுச்சி அடைகிறது’ மாநாடு நடை​பெற உள்​ளது. இதில் பெரு​மள​வில் முதலீடு​கள் ஈர்க்​கப்​படும்.

ஜிஎஸ்டி வரி அண்​மை​யில் குறைக்​கப்​பட்​டது. இதன் மூலம் 395 பொருட்​கள் மீதான வரி பூஜ்ஜிய​மாகி உள்​ளது. இதனால் பொது​மக்​கள் மிகுந்த பலன் அடைந்து வரு​கின்​றனர். வரும் தீபாவளி பண்​டிகை​யின்​போது சுதேசி பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும். இதை அனை​வரும் கண்​டிப்​புடன் பின்​பற்ற வேண்​டு​கிறேன்​. இவ்​வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.