கோலிவுட்டில் தற்போது மோஸ்ட் வான்டட் நடிகையாக வலம் வருகிறார் மமிதா பைஜூ.
`டியூட்’, ஜனநாயகன்’, சூர்யா 46′, தனுஷ் 54′ என அதிகம் எதிர்பார்க்கப்படும் அனைத்து கோலிவுட் படங்களிலும் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

`டியூட்’ திரைப்படம் இந்த வாரம் வெளியாகவிருப்பதால் படத்தின் புரோமோஷனில் அவர் தற்போது பங்கேற்று வருகிறார்.
அப்படி சமீபத்தில் `க்யூ ஸ்டுடியோ’ என்ற மலையாள யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் `சூர்யா 46′ திரைப்படம் தொடர்பாகவும் அவர் பேசியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர், “நான் ஆரம்பத்தில் சூர்யா சார் உடன் வணங்கான்’ படத்தில் நடிக்க இருந்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது எனக்கு நடக்கவில்லை.
அந்த நேரத்தில் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். எல்லாம் என் கைகளில் இருந்து நழுவிப் போனது போல் உணர்ந்தேன்.
ஆனால், `சூர்யா 46′ படத்தில் மீண்டும் அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தபோது வாழ்க்கை முழு வட்டம் என்பதை உணர்ந்தேன்.

இந்த முறை, எனக்கு மிக முக்கியமான கேரக்டர் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சூர்யா சார் என்னை நம்பி, சமமான முக்கியத்துவமும் மரியாதையும் கொடுத்தது உண்மையிலேயே பெருமையாக உணர்கிறேன்.
இந்த வாய்ப்புக்கு நான் மனதார நன்றியும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
விதி, மீண்டும் இந்த வாய்ப்பை எனக்கு மிக அழகான வகையில் கொண்டு வந்தது போல் உணர்கிறேன்.” எனப் பேசியிருக்கிறார்.