சென்னை; தமிழ்நாட்டில், ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷாதலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். மேலும் விரைவில் புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் தெரிவித்தார். சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஔவை மொழியே தமிழ்நாட்டின் கொள்கை என்றும் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், முதல்வர் ஸ்டாலின், சாதிய ஆணவப் படுகொலை விவகாரம் தொடர்பாக உரையாற்றி வருகிறார். அப்போது, சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஔவை மொழியே தமிழ்நாட்டின் கொள்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
