சென்னை; தீபாவளியையொட்டி தமிழ்நாட்டில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.600கோடிக்கு டாஸ்மாக் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.600 கோடிக்கு மதுபானங்கள் குவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் தீபாவளி நாளை மறுதினம் (20ந்தேதி) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி உள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில், எங்கு நோக்கிலும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. […]
