மரணம் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்று. இருப்பினும் சிலர் தங்களது இறுதி நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்து அது குறித்து சுற்றுத்தார்களிடம் கூறுவார்கள்.
தங்களின் கடைசி ஆசை அல்லது எதிர்காலத்தில் இவ்வாறு இருங்கள் என்று அறிவுரை கூறுவது என தங்களின் இறுதி நேரத்தை நெருங்கி விட்டதை உணர்ந்து வித்தியாசமான நடத்தையை வெளிப்படுத்துவார்கள். இது தற்செயலான நிகழ்வாக கருதப்பட்டாலும், இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜி இதழில் வெளியான ஒரு ஆய்வில், எதிர்பாராதவிதமாக தனது மரணத்தை உணர்ந்த நோயாளி பற்றி விவரிக்கப்பட்டுள்ளது
இதனை ஆராய்ச்சியாளர்கள் “மரண முன்னறிவிப்பு” என்று குறிப்பிடுகின்றனர். உடலின் உயிரியல் நரம்பியல் சமிச்சைகள் (signals) தான் இந்த ஆழ்ந்த உணர்வுக்கு காரணம் என்றும் அறிவியலாளர்கள் கணிக்கின்றனர்.

மரண முன்னறிவிப்பு என்பது என்ன?
மரணம் முன்னறிவிப்பு என்பது தனி நபர்கள் தங்களின் இறுதி நாட்கள் நெருங்கி விட்டதாக ஏற்படும் கனவுகள் அல்லது அசாதாரண உணர்வுகள் ஆகும்..
இறுதி கட்டத்தில் இருக்கும் நோயாளிகளிடம் ஒருவிதமான அமைதியான ஏற்றுக்கொள்ளுதல், விவரிக்க முடியாத தெளிவு ஆகியவை காணப்படுமாம். மரணத்தை நெருங்கும் தருவாய்களில் மூளை மற்றும் உடலுக்கு இடையிலான தொடர்பு, மூளை செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் தான் இந்த முன்னறிவிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
உடலின் செயல்பாடுகள் குறைய தொடங்கும் போது ஹார்மோன்கள் மற்றும் ஆக்சிஜன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பல விஷயங்கள் இதுபோன்ற உள்ளுணர்வுகளை ஏற்பட செய்கின்றதாகவும் கூறுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தை நெருங்கும் போது ஒருவரின் மூளை உணர்வுபூர்வமாகவே நிறைவில் தீவிரமான கவனத்தை செலுத்தக் கூடும் என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர். ஒருவேளை இந்த தெளிவுதான் அந்த நோயாளியின் மரணத்தின் முன்னறிவிப்பதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.