TVK: கரூரில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் அளித்த தவெக; வங்கியில் நேரடி டெபாசிட்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

அன்றிரவே இச்சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்த முதல்வர், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத்தொகை அறிவித்திருந்தார்.

கரூர் துயரம்
கரூர் துயரம்

மேலும், அன்றிரவே எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்த விஜய் அடுத்த நாள் காலையில், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் இழப்பீட்டுத்தொகை அறிவித்தார்.

இன்னொருபக்கம், கரூர் சம்பவத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை ரத்து செய்யக்கோரி த.வெ.க தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

விசாரணைகள் ஒரு பக்கம் சென்றுகொண்டிருக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் கரூருக்கு நேரில் சென்று, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து தலா ரூ. 1 லட்சம் காசோலை வழங்கினார்.

அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், தலா ரூ. 50,000 காசோலையாக உயிரிழந்தோர் குடும்பங்களிடம் தரப்பட்டது.

இந்த நிலையில் விஜய் அறிவித்தபடி, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு த.வெ.க சார்பில் தலா ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது.

விஜய்
விஜய்

மொத்தமாக உயிரிழந்த 41 பேரில் 39 குடும்பங்களின் வங்கிக் கணக்கில் இந்தத் தொகை வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

மீதமுள்ள 2 பேரின் குடும்பங்களில் யாரிடம் நிதி வழங்குவது என்பதில் சிக்கல் நிலவுவதால் விரைவில் உரிய நபரிடம் நிதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும், காயமடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட தலா ரூ. 2 லட்சம் கூடிய சீக்கிரம் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.