இந்தூர்,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்று வரும் 20வது லீக் ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன
மத்தியபிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்றுவரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து , களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஹீத்தர் நைட் அதிரடியாக ஆடி சதம் விளாசினார். அவர் 109 ரன்கள் குவித்தார். தொடக்க வீராங்கனை ஏமி ஜோன்ஸ் 56 ரன்களை சேர்த்தார். இந்திய தரப்பில் தீப்தி ஷர்மா அதிகபட்சமாக 51 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா களமிறங்கி விளையாடி வருகிறது.