Bollywood: “நாங்கள் இணைந்து நடிக்கும் படம் ?'' – ஒரே மேடையில் பாலிவுட்டின் கான்கள்!

பாலிவுட்டின் மூன்று கான்களும் ஒரே மேடையில் ஒன்று கூடியிருக்கிறார்கள். சமீபத்தில் சவுதி அரேபியாவில் ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான் என மூவரும் ஒரே நிகழ்வுக்கு வருகை தந்து தங்களுக்குள் இருக்கும் பரஸ்பர நட்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பகிர்ந்ததும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மூவரும் இதுவரை ஒரே படத்தில் இணைந்து நடித்தது கிடையாது.

Shah Rukh Khan, Salman Khan & Aamir Khan
Shah Rukh Khan, Salman Khan & Aamir Khan

ஆனால், சமீபத்தில் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் இயக்கத்தில் வெளிவந்திருந்த ‘The Bastards of Bollywood’ வெப் சீரிஸில் பாலிவுட்டின் இந்த சூப்பர் ஸ்டார்கள் கேமியோ செய்திருந்தனர்.

மூவரும் இணைந்து நடிப்பதிலிருந்து தொடங்கி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் இந்த நிகழ்வில் பகிர்ந்திருக்கிறார்கள்.

சல்மான் கான் பேசுகையில், “நாங்களே எங்களை நட்சத்திரங்கள் என்று அழைப்பதில்லை. சில பத்திரிகையாளர்கள் ‘சல்மான் கான், நட்சத்திரம்’ அல்லது ‘ஆமிர் கான், சூப்பர் டூப்பர் நட்சத்திரம்’ என்று எழுதலாம்.

ஆனால் நாங்கள் அதை முற்றிலும் நம்புவதில்லை. வீட்டில், நாங்கள் மற்றவர்களைப் போலவே இருக்கிறோம். என் தந்தையும் தாயும் இன்னும் என்னைத் திட்டுகிறார்கள். இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பார்வையாளர்கள்தான் எங்களை உருவாக்குகிறார்கள்.

அவர்கள் தான் என்னைப் போன்ற சராசரி, சாதாரண மனிதர்களைத் திரையில் காண்பவர்களாக மாற்றுகிறார்கள்,” என்றார்.

Salman Khan & Aamir Khan
Salman Khan & Aamir Khan

மூவரும் எப்போது இணைந்து நடிக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் தந்த ஆமிர் கான், “இது சரியான கதையைச் சந்திப்பது பற்றியது. எனவே, நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

எங்களுக்கு மூவருக்கும் மிக முக்கியமானது கதைதான்,” என்றதும் சல்மான் கான், “ஷாருக்கிற்கு ஒரு விஷயம் உள்ளது. எங்களை மூவரையும் ஒரு படத்தில் ஒரே நேரத்தில் யாராலும் வாங்க முடியாது என்று அவர் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்,” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.