தித்திப்பு நாள்… தீபாவளி!! விழாவின் ஆணிவேர் என்ன என்பதை தேடாமல்…. மகிழ்ச்சியோடு விழாவை வரவேற்போம் !!!! இன்று ஒரு நாள் இலக்குகளை ஒதுக்கி வைப்போம்… களிப்புறுவோம் குடும்பத்தோடு!!! எட்டு திக்கிலும் ஏற்றி வைப்போம் மகிழ்ச்சி தீபத்தை, இதயங்கள் ஒளி பெறட்டும்!!! நெருப்(பு)பூக்கள் நாற்புறமும் நடனமிடும்…. ரசித்திடுங்கள் சிறுவர்களாகவே!! வற்றாத கங்கையைப் போல மகிழ்ச்சியும் புது வெள்ளமாய் பரவட்டும்!! அசுர குணங்களை வேரறுத்து தேவ குணங்களை தெளிவாக இன்றே பின்பற்றுவோம்!!! கோப தாபங்கள் சுயநல, எண்ணங்களை விட்டொழிப்போம்! […]
