சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி, பொதுமக்கள் வெடித்த வெடிகளால், சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் கடந்த ஆண்டை விட குறைவு என்றம் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி காற்று மாசு 154 ஆக சராசரியாக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் நேற்று (அக். 20ந்தேதி) தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதுபோல தமிழகத்திலும் இந்த ஆண்டு வழக்கமானதை விட மிகவும் உற்சாகத்துடன் தீபாவளியை மக்கள் கொண்டாடினர். சென்னை உள்பட […]
