திருவனந்தபுரம்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று இருமுடி கட்டிச்சென்று சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்தார் . பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று மாலை கேரள மாநில தலைவர் திருவனந்தபுரம் வருகை தந்துள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, இன்று இருமுடி கட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்தார். அவரது ஆன்மீக வருகை இந்தியாவின் மத மரபுகள் மீதான அவரது ஆழ்ந்த மரியாதையை எடுத்துக்காட்டுகிறது. குடியரசு தலைவர் சபரிமலை செல்வதற்காக இன்று காலை […]
