விருதுநகர்: மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிர்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், விருதுநகரில் ஆய்வு செய்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்; 19 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையில் உயிரிழந்த […]
