இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை முடித்த கையோடு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்நாட்டு அணிக்கு எதிராக இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. முதல் போட்டி 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி கடுமையான தடுமாற்றத்தை எதிர்கொண்டது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
Add Zee News as a Preferred Source
இந்த சூழலில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி நாளை (அக்டோபர் 23) அடிலெய்டில் நடைபெற இருக்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக அடிலெய்டு மைதானத்தில் ஆஸ்திரேலியா அணி எந்த ஒரு ஒருநாள் போட்டியிலும் தோல்வி அடைந்ததே இல்லாததால் இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே இந்திய அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்து இருக்கும் நிலையில், இப்போட்டியிலும் தோல்வி அடைந்தால் ஆஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றிவிடும்.
இதன் காரணமாக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நாளைய போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என கூறப்படுகிறது. பயிற்சியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் இணைந்து பயிற்சி மேற்கொண்டனர். அப்போது தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகிய இருவரும் ஜெய்ஸ்வாலுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனால் இரண்டாவது போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமோ என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த போட்டியில் மூத்த வீரர் ரோகித் சர்மா 8 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், இரண்டவது போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பளிக்கப்படுமோ என சந்தேகம் எழுந்துள்ளது. ஜெய்ஸ்வால் ஒருவேளை அணியில் எடுத்தால், அவர் தொடக்க வீரர்ராகதான் களமிறக்கப்படுவார். அப்படி இருக்கும்பட்சத்தில் கில் கேப்டன் என்பதால் அவரை அணியில் இருந்து நீக்க முடியாது. இதனால் ரோகித் சர்மாவை நீக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஜெய்ஸ்வால் இதுவரை ஒரே ஒரு ஒருநாள் போட்டியில்தான் விளையாடி இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர் 15 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் தொடருக்கான அணி
இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல்.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.
About the Author
R Balaji