இந்தியா vs ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்குமா?

India vs Australia 3rd ODI 2025: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (SCG) நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. எனவே, இப்போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றிக்காக போராட, ஆஸ்திரேலியா அணியோ இந்தியாவை வைட்வாஷ் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணிலோ அல்லது வெளியிலோ இந்தியாவை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒருபோதும் முழுமையாகத் தோற்கடிக்கவில்லை (Clean Sweep). இந்த புதிய வரலாற்றைப் படைக்க அந்த அணி காத்திருக்கிறது.

Add Zee News as a Preferred Source

இந்திய அணி இந்தத் தொடரில் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்படவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, இரண்டாவது ஆட்டத்தில் கொஞ்சம் சிறப்பாக ஆடினாலும், வெற்றி பெற முடியவில்லை. முதல் இரு போட்டிகளிலும் கேப்டன் சுப்மன் கில் சீக்கிரமே அவுட்டாக, விராட் கோலியோ தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதன்முறையாக தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களில் டக் அவுட் ஆன அரிதான சம்பவமும் நடந்தது. இரண்டாவது போட்டியில் ரோகித் ஷர்மா பார்முக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் தான் இந்தியா மூன்றாவது போட்டியில் இந்தியா களமிறங்க இருக்கிறது.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மழை வருமா?

சிட்னியில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியின்போது மழை பெய்வதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. வெப்பநிலை சுமார் 16 டிகிரி செல்சியஸ் முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், ஈரப்பதம் 56-69 சதவிகிதம் வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, ரசிகர்கள் மழை குறுக்கீடு இல்லாமல் முழு ஆட்டத்தையும் கண்டு ரசிக்கலாம்.

போட்டி நேரம் மற்றும் நேரடி ஒளிபரப்பு விவரங்கள்:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி வியாழக்கிழமை (அக்டோபர் 25) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

போட்டி இந்திய நேரப்படி காலை 9:00 மணிக்குத் தொடங்குகிறது. டாஸ் போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக நடைபெறும். போட்டியின் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் காணலாம். போட்டியின் நேரடி ஸ்ட்ரீமிங்கை ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) செயலி மற்றும் இணையதளத்தில் கண்டு களிக்கலாம்.

இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:

இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா அணி: ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல்.

ஆஸ்திரேலியா அணி: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மார்னஸ் லபுஷேன், மேத்யூ ஷார்ட், மேட் ரென்ஷா, மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப் (விக்கெட் கீப்பர்), கூப்பர் கொன்னோலி, மிட்செல் ஸ்டார்க், சேவியர் பார்ட்லெட், ஜோஷ் ஹேசில்வுட், பென் துவார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், மேத்யூ குனேமன். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.