ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் காலத்தால் அழியாதவை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புகழாரம்

திரு​வனந்​த​புரம்: இந்​தி​யா​வின் தலைசிறந்த ஆன்​மிகத் தலை​வரான ஸ்ரீ நாராயண குரு​வின் போதனை​கள் காலத்தால் அழியாதவை என்று குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு குறிப்​பிட்​டார்.

கேரளா​வின் வர்க்​கலா​வில் உள்ள சிவகிரி மடத்​தில் ஸ்ரீ நாராயண குரு​வின் மகா சமாதி நூற்​றாண்டு நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இந்​நிகழ்ச்​சி​யில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பங்​கேற்று பேசி​ய​தாவது:

மக்​களை அறி​யாமை, மூடநம்​பிக்கை எனும் இருளில் இருந்து விடுவிக்க குரு தனது வாழ்க்​கையை அர்ப்​பணித்​தார். ஒவ்​வொரு மனிதரிட​மும் தெய்​வீகத்தை காண தூண்​டு​கோலாக விளங்​கி​னார். சமத்​து​வம், ஒற்​றுமை, மனிதகுலம் மீதான அன்பு ஆகிய கொள்​கை​களில் நம்​பிக்கை கொள்ள பல தலை​முறை​களை அவர் ஊக்​கு​வித்​தார்.

ஒரே சாதி, ஒரே மதம், மனித குலத்​துக்கு ஒரே கடவுள் என்ற அவரது சக்​தி​வாய்ந்த போதனைகள், மூடநம்​பிக்​கை, சாதி, மதம் என அனைத்து தடைகளை​யும் தகர்த்​தது. உண்​மை​யான விடு​தலை, அறிவு மற்​றும் இரக்​கத்​திலிருந்து வரு​கிறது, குருட்டு நம்​பிக்​கை​யில் இருந்து அல்ல என்று அவர் நம்​பி​னார்.

கோயில்​கள், பள்​ளி​கள் மற்​றும் அமைப்​பு​களை அவர் நிறு​வி​னார். அவை கற்​றல் மற்​றும் தார்​மீக வளர்ச்​சிக்​கான மையங்​களாக செயல்​பட்​டன. இந்த அமைப்​பு​கள் மூலம், ஒடுக்​கப்​பட்ட சமூகங்​களிடையே எழுத்​தறி​வு, தன்​னம்​பிக்கை மற்​றும் ஒழுக்க நெறிகளை அவர் ஊக்​கு​வித்​தார். இந்த நவீன உலகிலும் அவரது போதனை​கள் முன்​னெப்​போதை​யும் விட மிக​வும் பொருத்​த​மானவை. ஒற்​றுமை, சமத்​து​வம் மற்​றும் பரஸ்பர மரி​யாதைக்​கான அவரது அழைப்பு மனிதகுலம் எதிர்​கொள்​ளும் மோதல்​களுக்கு காலத்​தால் அழி​யாத தீர்வை வழங்​கக் கூடிய​வை. இவ்​வாறு அவர் பேசி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.