தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

புதுடெல்லி: இளைஞர்​களுக்கு அதி​காரம் அளிப்​ப​தற்​கான பணி​யில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி அரசு ஈடு​பட்டு வரு​கிறது என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

இளைஞர்​களுக்கு அரசு பணி ஆணையை வழங்​கும் 17-வது ரோஜ்கர் மேளா ஜார்க்கண்ட் மாநில ராஞ்சியில் நேற்று நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்​திர மோடி​யின் பேச்சு ஒலிபரப்​பப்​பட்​டது. அதில் பிரதமர் நரேந்​திர மோடி கூறி​யிருப்​ப​தாவது:

நாட்​டில் இளைஞர்​களுக்கு வழி​காட்​டும் சிறந்த அரசாக பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி அரசு செயல்​பட்டு வரு​கிறது. இளைஞர்​களுக்கு மத்​திய அரசின் வேலையை வழங்​கு​வதற்​கான பணி ஆணை​கள் வழங்​கப்​பட்டு வரு​கிறது. 17-வது ரோஜ்கர் மேளா​வில் 51 ஆயிரம் பேருக்கு பணி​யாணை​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

தே.ஜ. கூட்​டணி அரசு இளைஞர்​களுக்கு அதி​காரம் அளிக்​கும் பணி​யில் ஈடு​பட்டு வரு​கிறது. நாட்​டின் வெளி​யுறவுக் கொள்கை கூட இளைஞர்​களின் நலனைக் கருத்​தில் கொண்டு வடிவ​மைக்​கப்​பட்​டது.

இந்த நம்​பிக்​கை​யுட​னும், கொள்​கை​யுட​னும், நாங்​கள் ஒவ்​வொரு துறை​யிலும் முன்​னேறி வரு​கிறோம். நமது ராஜதந்​திர ஈடு​பாடு​களும் உலகளா​விய ஒப்​பந்​தங்​களும் இளைஞர் பயிற்சி மற்​றும் வேலை​வாய்ப்பு உரு​வாக்​கத்​தில் அதிக கவனம் செலுத்தி வரு​கின்​றன.

ரோஜ்கர் மேளா மூலம் இது​வரை 11 லட்​சம் பேருக்கு அரசு பணி​யாணை​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. மேலும், இந்​தி​யா​வில் நடுத்தர மற்​றும் சிறிய தொழிற்​சாலைகள், நிறு​வனங்​கள் அமைப்​ப​தற்​காக பிரேசில், சிங்​கப்​பூர், தென் கொரி​யா, கனடா உள்​ளிட்ட நாடு​களு​டன் ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. இதன்​மூலம் நாட்​டின் ஏற்​றுமதி வலுப்​படும். பல்​வேறு துறை​களும் வளர்ச்சி அடை​யும். இந்த வேலை​வாய்ப்​பு​களை இளைஞர்​கள் நன்கு பயன்​படுத்​திக்கொள்​ள வேண்​டும்.

ஜிஎஸ்​டி-​யில் அண்​மை​யில் கொண்டு வரப்​பட்ட சீர்​திருத்​தங்​கள் மூலம் மிகப்​பெரிய மறுமலர்ச்சி ஏற்​படும். இதனால் நாட்டு மக்​களின் பணம் சேமிக்​கப்​படும். இவ்​வாறு பிரதமர் மோடி கூறி​யுள்​ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.