டாக்கா,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டி சட்டோகிராமில் இன்று நடந்து வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸின் தொடக்க வீரர்களாக பிரண்டன் கிங் மற்றும் அலிக் அத்தானஸ் களம் கண்டனர்.
இருவரும் நிதானமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தனர். இதில் அலிக் அத்தானஸ் 34 ரன்னிலும், பிரண்டன் கிங் 33 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய ரூதர்போர்டு ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இதையடுத்து ஷாய் ஹோப் மற்றும் ரோவ்மன் பவல் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 46 ரன் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் தஸ்கின் அகமது 2 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் ஆட உள்ளது.