பாட்னா,
பீகார் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியில், தேர்தல் டிக்கெட்டுகள் பணத்துக்கு விற்கப்பட்டதாக அதிருப்தியாளர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதுபோன்ற அதிருப்தியை சரிக்கட்டவும், காங்கிரஸ் கட்சிக்கு வியூகம் வகுக்கவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பீகாரில் முகாமிட்டுள்ளனர் .இந்தநிலையில் பீகாரில் 2 நாட்கள் ராகுல்காந்தி பிரசாரம் செய்யவுள்ளார்.
இது தொடர்பாக பேசிய காங்கிரச் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால்,
”சாத் பண்டிகைக்குப் பிறகு எங்கள் பிரசாரம் தொடங்கவுள்ளது. அக். 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி பிரசாரம் செய்யவுள்ளார். வாக்காளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி ஆகியோரும் பிரசாரத்தில் பங்கேற்கவுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.