பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் கஹல்கான் தொகுதி பாஜக எம்எல்ஏ பவன் யாதவுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இத்தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த பவன் யாதவ் இத்தொகுதியில் என்டிஏ வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இதையடுத்து கட்சி விரோத செயல்பாடுகள் காரணமாக பவன் யாதவ் உள்ளிட்ட 6 பேர் மீது பாஜக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக வெளியிட்ட அறிக்கையில், எம்எல்ஏ பவன் யாதவ், உள்ளூர் தலைவர்கள் ஷ்ரவண் குஷ்வாகா, உத்தம் சவுத்ரி, மாருதி நந்தன் மாருதி, பவன் சவுத்ரி ஆகிய 6 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.