சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தோடங்கி பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அரசு போக்குவரத்து துறையினருக்கு தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து உள்ளது. வடகிழக்கு பருவ மழை, புயல் முன்னெச்சரிக்கை காரணமாக பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளதுடன், சாலைகளில் பேருந்தை இயக்கும்போது கவனமாக வெள்ளத்தின் தன்மையை அறிந்து இயக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. வழிகாட்டு […]