"கரப்பான் பூச்சிகள்".. கோலி, ரோஹித்துக்கு எதிரான விமர்சனங்கள்.. ஆதரவு கரம் நீட்டிய நண்பர்!

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்காக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் வெளிப்படையான ஆதரவுரை வழங்கியுள்ளார். இவரது கருத்துக்கள் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் இருவரும் விமர்சனங்களை சந்தித்துள்ள நிலையில் தற்போது இது ரசிகர்களிடையே பரவலாக பதிவு செய்யப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  ஒருநாள் தொடரில், ரோஹித் மற்றும் கோலிக்கு வயதாகிவிட்டதாகவும், ஓய்வு பெற வேண்டுமென சிலர் விமர்சனம் எழுப்பினர். தொடரின் ஆரம்ப இரண்டு ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி டக் அவுட் ஆனார். ஆனால், மூன்றாவது போட்டியில் இருவரும் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்கள்.ரோஹித் சர்மா 121 ரன்களும், விராட் கோலி 74 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் ஏபி டிவில்லியர்ஸ், “கோலி மற்றும் ரோஹித்தை விமர்சிக்கும் நபர்கள் குறித்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை; ஒரு வேளை நான் அவர்களை கரப்பான் பூச்சி என்று அழைப்பேன்,” என்றார். “கரப்பான் பூச்சிகள் போல, பலரும் வெளியிலிருந்து வந்து பட்சமாக பேசினர். இந்திய வீரர்கள் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் நாட்டுக்காக அர்ப்பணித்து உள்ளார்கள். ஏன் விமர்சனங்கள்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அவரது கருத்துக்கு சமூக ஊடகங்களில் ஆதரவு பெருகி வருகிறது. பல இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், “விராட் மற்றும் ரோஹித் சர்மாவுக்கு தொடர்ந்த ஆதரவு தேவை” என வலியுறுத்தியுள்ளனர். விமர்சனம் செய்யும் குறைப் பேர் மட்டுமே எதிர்மறையாக நடந்துக் கொள்கிறார்கள்; பெரும்பான்மையினர் இந்த வீரர்களின் சாதனைகளை போற்றுகின்றனர் என டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.

ஏபி டிவில்லியர்ஸ், “கிரிக்கெட் போன்ற விளையாட்டை கொண்டாட, தற்போது தான் நேரம். கோலி, ரோஹித்தின் கடைசிக் காலங்கள் அவர்களின் உண்மை திறமை காட்டும் காலங்கள்” என்றார்.

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.