Rohit Sharma ICC ODI Ranking: இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் ரோகித் சர்மா, 38 வயதில் சாதனை படத்திருக்கிறார். இந்த வயதில் ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் ஒருவர் முதல் இடம் பிடிப்பது இதுவே முதல் முறை.
Add Zee News as a Preferred Source
டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்களில் இருந்து ஓய்வை அறிவித்த ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வந்தார். இந்த சூழலில், சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடினார். முதல் போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். இரண்டாவது போட்டியில் 73 ரன்கள் மற்றும் மூன்றாவது போட்டியில் 124 ரன்களையும் குவித்தார். மொத்தமாக 202 ரன்களை குவித்த ரோகித் சர்மா, மூன்றாவது போட்டிக்கான ஆட்டநாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார்.
இந்த நிலையில், ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் 781 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார் ரோகித் சர்மா. இதனால் சுப்மன் கில் சருக்கலை சந்தித்து இருக்கிறார். இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஷாட்ரான் உள்ளர். அவர் 764 புள்ளிகளுடன் இருக்கிறார். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் கில் 745 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ரோகித் சர்மா ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது போன்ற பல விமர்சனங்கள் வந்த நிலையில், அவர்களுக்கு தனது பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோருக்கு பிறகு நம்பர் ஒன் இடத்தை பிடித்த இந்தாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இதுவரை 276 ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா விளையாடி இருக்கிறார். அதில் 11370 ரன்களை குவித்து 49.22 என்ற சராசரியுடன் 92.6 ஸ்ட்ரைக் ரேட்டுடன் உள்ளார். ஒருநாள் போட்டிகளில் மட்டும் அவர் 33 சதங்கள் மற்றும் 59 அரைசதங்களை விளாசி உள்ளார்.
ஆஸ்திரேலியா தொடரில் விளையாடி முடிந்தவுடன் இந்திய அணி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இத்தொடர்களின் ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா பங்கேற்க உள்ளார்.
About the Author
R Balaji