வள்ளுவன்: “சிவகாசி; ஒரு காட்சிக்காக என் மீதும், விஜய் மீதும் வழக்கு பதிவு செய்தார்கள்" – பேரரசு

விஷால் நடிப்பில் வெளியான ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த தெலுங்கு நடிகரான சேத்தன் சீனு நடித்திருக்கும் படம் வள்ளுவன்.

இயக்குநர் சங்கர் சாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை ஆறுபடை புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது.

அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் மீசை ராஜேந்திரன், “இந்தப் படத்தின் இயக்குநர் பேசும்போது, இந்த நாட்டுக்கோ, இந்த நாட்டின் மக்களுக்கோ ஒருவன் துரோகம் செய்தால் அவனைக் கொன்றால் கூட அது தர்மம் என்றார்.

வள்ளுவம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
வள்ளுவம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

அப்படியானால் செப்டம்பர் 27 அன்று நடந்ததற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள். இந்தப் படத்தின் இயக்குநரை நீண்ட வருடங்களாக தெரியும்.

தமிழில் தலைப்பு வைத்திருக்கிறார். படக்குழுவினருக்கு வாழ்த்துகள். அந்த 7 நாள்கள் திரைப்படத்தின் இறுதி காட்சியில் பாக்கியராஜ் `என் காதலி உன் மனைவியாகலாம் ஆனால், உன் மனைவி என் காதலியாக முடியாது’ என்பார்.

ஆனால் சமீபத்தில் வந்த படத்தில் வரும் கருத்துகள் அதற்கு மாற்றமாக வருகிறது. அதைதான் ரசிக்கிறார்கள். தமிழ் கலாச்சாராத்தை மாற்றாதீர்கள்.

தமிழ் சினிமாவுக்கென ஒரு பலம் இருக்கிறது. காந்தாரா மாதிரியானப் படங்கள் தமிழில் வெளிவராததற்கு காரணம் கலாச்சார சீரழிவுதான்.” என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பேரரசு,“வள்ளுவன் படத்தின் இயக்குநர் சங்கர் சாரதி ஒரு மாதத்துக்கு முன்பே இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வுக்கு அழைப்பு கொடுத்துவிட்டார்.

மீசை ராஜேந்திரன்
மீசை ராஜேந்திரன்

இப்போது அரசு சாதி பெயரின் இறுதியில் ‘ன்’ என்பதற்கு பதிலாக ‘ர்’ என மாற்றச் சொல்லியிருக்கிறது. இந்த படத்தின் வள்ளுவன் என்பதற்கு பதிலாக வள்ளுவர் என வைத்திருக்கலாம்.

ஆனால், தலைப்பிலேயே ‘இவன் வன்முறையாளன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். வள்ளுவர் கையில் இருந்த எழுத்தாணியை எடுத்துவிட்டு கத்தியை கொடுத்துவிட்டார்.

இபோது இருக்கும் சூழலில் வள்ளுவர் இருந்திருந்தால் அவரே கத்தியை கையில் எடுத்திருப்பார். அவ்வளவு அநியாயம் நடக்கிறது.

முன்பெல்லாம் கலைஞர் கருணாநிதி நகர் எனப் பெயர் வைப்பார்கள். ஆட்சி மாறியதும் அது கே.கே.நகர் என மாறிவிடும். ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் பஸ் கலர் மாறும். ஒரு கட்டத்தில் திருவள்ளுவரையே மாற்றினார்கள்.

நெற்றியில் பட்டையோடு இருந்தவரின் பட்டையை அழித்தார்கள். இந்து பற்றாளர்கள் நெற்றி கை, தோள் எனப் பட்டையடித்து காவியாக மாற்றினார்கள்.

கொலைகாரர்களை கொல்வது அரசின் கடமை என்பதுதான் இந்தப் படத்தின் கதை. நீதிபதியை விமர்சித்தாலே கைது என்கிறபோது, அந்த நீதியைக் கேள்வி கேட்கும் படத்தை இயக்க ஒரு தைரியம் வேண்டும்.

வள்ளுவம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
வள்ளுவம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

சிவகாசியில் வக்கில் ஒருவருக்கு டீ வாங்கி கொடுக்கும் காட்சியை நகைச்சுவைக்காகப் படமாக்கினேன். அதற்காக தமிழ்நாட்டில் எங்கெல்லாம் நீதிமன்றம் இருக்கிறதோ அங்கெல்லாம் என் மீதும், விஜய் மீதும், படத்தின் தயாரிப்பாளர் மீதும் வழக்குப் பதிவு செய்தார்கள்.

இந்தப் படத்தில் நீதிபதியையே விலைக்கு வாங்கலாம் என வசனம் வைத்திருக்கிறார். இவர் நூறு பேரரசுக்கு சமம். கலாச்சார சீரழிவை முன்வைத்து எடுக்கப்படும் படத்தைவிட ஆபாசப் படம் எடுப்பது எவ்வளவோ மேல். நல்ல கருத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும். அதுதான் இயக்குநரின் முக்கியமான வேலை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.