அணு ஆயுத சோதனையில் இறங்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்

மாஸ்கோ,

சோவியத் ரஷியா மற்றும் அமெரிக்கா இடையே 1990-களில் பனிப்போர் நிலவியது. இதனால் இருநாடுகளும் அணு ஆயுத சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து போரில் சோவியத் ரஷியா தோல்வி அடைந்ததை தொடர்ந்து அது ரஷியாவாக பிரிக்கப்பட்டது.

மேலும் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் அணு ஆயுத சோதனையை மேற்கொள்ள ஐ.நா. அமைப்பால் தடைவிதிக்கப்பட்டது. இந்தநிலையில் உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்கி 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாட்டு தலைவர்களின் தொடர் முயற்சி தோல்வியடைந்து வருகிறது. குறிப்பாக ரஷிய அதிபர் புதின் இந்த போரை முடிவுக்கு கொண்டு வராமல் தொடா்ந்து இழுத்தடிப்பு செய்து வருகிறார். இதனிடையே ரஷிய ராணுவம் தற்போது அணுசக்தி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. ‘பறக்கும் அணுஉலை’ என்று சொல்லக்கூடிய அதிநவீன அணுசக்தி ஏவுகணையான ‘புரெவெஸ்ட்னிக்‌’கை சோதித்தது.

எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து எதிரி இலக்குகளை துல்லியமாக தாக்கும் தன்மை கொண்டதாக இது உள்ளது. இந்தநிலையில் மீண்டும் ஒரு அணு ஆயுதத்தை ரஷியா நேற்று சோதித்தது. அணுசக்தியால் இயங்கும் வல்லமை கொண்ட கட்டுக்கடங்காத தூரம் செல்லும் நீர்மூழ்கி டிரோனை ரஷியா வெற்றிகரமாக சோதித்தது. ‘போசைடன் சூப்பர் டார்பிடோ’ என பெயரிடப்பட்டுள்ள இந்த டிரோன் ரஷியாவின் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையைவிட தாக்கும் திறன் கொண்டது. இதனை ரஷிய அதிபர் புதின் உறுதிப்படுத்தினார். அவர், “அணு உலையைபோல 100 மடங்கு சக்திவாய்ந்த அணு என்ஜின் பொருத்தப்பட்ட நீர்மூழ்கி டிரோன் சோதனை வெற்றிப்பெற்றுள்ளது” என்றார்.

ரஷியாவின் இந்த சோதனைக்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில், “அமெரிக்கா வேறு எந்த நாட்டையும் விட அதிக அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது. ரஷியா 2-வது இடத்தில் உள்ளது, சீனா 3-வது இடத்தில் உள்ளது. ரஷியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகளால் 5 ஆண்டுகளுக்குள் அது அமெரிக்காவை ஈடு செய்யும். மற்ற நாடுகள் அணு ஆயுதங்களை சோதிப்பதால், நமது அணு ஆயுதங்களை சமமான அடிப்படையில் சோதிக்கத் தொடங்குமாறு ராணுவத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளேன். அந்த செயல்முறை உடனடியாகத் தொடங்கும்” என்றார். இதனால் 30 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா அணு ஆயுத சோதனையில் ஈடுபட உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.