இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடர் நேற்று முன்தினம் (அக்டோபர் 29) தொடங்கியது. முதல் போட்டியில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில் இன்று (அக்டோபர் 31) இரண்டாவது டி20 போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இப்போட்டியாலவது அர்ஷ்தீப் சிங் பிளேயிங் 11ல் கொண்டு வரப் படுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
Add Zee News as a Preferred Source
ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு
முன்னதாக முதல் போட்டியில் அர்ஷ்தீப் சிங்கை கழற்டிவிட்டு ஹர்ஷித் ராணாவை இந்திய அணி தேர்வு செய்தது. இது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. டி20 கிரிக்கெட்டில் வெறும் 64 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங்கை கழற்டிவிடுவது எந்த வகையில் நியாயம் என கொந்தளித்து வருகின்றனர்.
ஹர்ஷித் ராணா கடந்த 2024 ஐபிஎல் தொடரை வெல்ல கெளதம் கம்பீர் வழிகாட்டுதலில் கொல்கத்தா அணிக்கு உதவினார். இதன் காரணமாக அவர் மேல் உள்ள நம்பிக்கையில் பயிசியாளர் கெளதம் கம்பீர் அவருக்கு 3 வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறார். அதன்படி ஒருநாள் தொடரில் கிடைத்த வாய்ப்பில் ராணா 6 விக்கெட்களை வீழ்த்தினார். குறிப்பாக சிட்னியில் நடந்த மூன்றாவது போட்டியில் 4 விக்கெட்களை எடுத்தார். மற்றபடி பெரியளவில் ராணா ஏதும் சாதிக்கவில்லை.
100 எடுத்த முதல் வீரர் அர்ஷ்தீப் சிங்
அர்ஷ்தீப் சிங்கை எடுத்துக்கொண்டால் காந்த 2022ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமனார். இதையடுத்து இந்திய அணியில் தொடர்ந்து அசத்திய அவர், இந்திய டி20ல் 100 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணியை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அப்படி இருக்கையில் 8வது இடத்தில் இருக்கும் பந்து வீச்சாளர் சில ரன்களை அடிக்க வேண்டும் என்பதற்காக ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.
கொந்தளித்த ஆகாஷ் சோப்ரா
இந்த நிலையில், அரைகுறை பேட்டிங் செய்யும் ராணாவை நம்பி அர்ஷ்தீப் சிங் போன்ற முக்கிய வீரரை கழற்டிவிடுவது சரியல்ல என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்கள் எடுத்த முதல் வீரர் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆஸ்திரேலியாவில் வாய்ப்பு கிடைக்காதது குழப்பமளிக்கிறது. நடந்து முடிந்த ஆசிய கோப்பையிலும் தொடர்ந்து அவர் விளையாடவில்லை. இதனால் அடுத்த டி20 உலகக் கோப்பையில் அர்ஷ்தீப் சிங் விளையாடுவாரா என்ற கேள்வி எழும்புகிறது.
இந்திய அணி 8வது இடத்தில் பேட்டிங் செய்பவர் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருப்பதனாலேயே ஹர்ஷித் ராணா தேர்வாகி உள்ளார். அவரது பந்து வீச்சு திறமையை காட்டிலும் பேட்டிங் திறமைக்கு முக்கியதுவம் கொடுத்தே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் உண்மை என்னவெனில் நீங்கள் நினைப்பது போல் அந்த 8வது இடத்தை ராணா இன்னும் பூத்தி செய்யவில்லை என அகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
About the Author
                  
                  R Balaji
