கோவை: கோவை ஒண்டிப்புதூரில் சுமார் 20.72 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் திட்டப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் டெண்டர் கோரி உள்ளது. இந்த மைதானம், பொது-தனியார் பங்களிப்பு முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், சுமார் 30 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டிகளை காணும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் நகரம் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்ததாக வேகமாக வளர்ச்சி அடைந்து […]
